×

#BREAKING ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை 

 

ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்கரையை ஒட்டிய பரப்பில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்கரையை ஒட்டிய பரப்பில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகுகளாக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  கிழக்கு ஜப்பான் ரயில்வே பகுதியில் சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.