×

செல்வாக்கு மிகுந்த அதிபர் பட்டியலில் டொனால்டு ட்ரம்ப்க்கு எந்த இடம் தெரியுமா?

அமெரிக்க அதிபர் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் அதன் பாதிப்பு ஏற்படுத்தும் பதவியாகும். அதனால்தான் அமெரிக்க தேர்தல் அப்டேட்களை உலகமே உற்று கவனித்து வருகிறது. அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் 1789 முதல் 1797 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் அதிபராகப் பதவி வகித்தார். அவர் தொடங்கி தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் வரை அமெரிக்காவில் இதுவரை 45 நபர்கள் அதிபர் பதவி வகித்துள்ளனர். அமெரிக்க அதிபர்களில் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர் யார்
 

அமெரிக்க அதிபர் என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் அதன் பாதிப்பு ஏற்படுத்தும் பதவியாகும். அதனால்தான் அமெரிக்க தேர்தல் அப்டேட்களை உலகமே உற்று கவனித்து வருகிறது.

அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் 1789 முதல் 1797 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் அதிபராகப் பதவி வகித்தார். அவர் தொடங்கி தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப் வரை அமெரிக்காவில் இதுவரை 45 நபர்கள் அதிபர் பதவி வகித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர்களில் மக்களிடையே செல்வாக்கு பெற்றவர் யார் எனும் சர்வே நடத்தப்பட்டது. அதில் 50 மாகாணங்களில் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் இடத்தைப் பிடித்தவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ( பதவி காலம் 2001 – 2009). அடுத்த இடத்தில் இவரின் தந்தையான ஜார்ஜ் ஹெச். டபுள்யூ. புஷ்.

உலகில் பரவலான புகழைப் பெற்றிந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் ஜென்னடி நான்காம் இடத்தையும், பில் கிளிண்டன் ஒன்பதாம் இடத்தையும் பிடித்தனர்.

அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பொறுப்பேற்று பலரின் பாராட்டுகளைப் பெற பராக் ஒபாமாவுக்கு 12-வது இடமே கிடைத்தது.

தற்போதைய அதிபரும் அடுத்த தேர்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்க்கு இருப்பத்திலேயே கடைசி இடமான 14-ம் இடம் அளித்துள்ளனர் அமெரிக்க மக்கள்.

இன்னும் ஒரே வாரம்தான் அமெரிக்கத் தேர்தலுக்கு இருக்கிறது. இந்நிலையில் இப்படியான சர்வே முடிவு அமெரிக்கத் தேர்தல் முடிவிலும் எதிரொலிக்கக்கூடும் என கருதுகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த சர்வே முடிவு என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.