×

இங்கிலாந்து மகராணி எப்படி மது அருந்துவார் தெரியுமா..? மதியம் ஜின்னில் ஒயின் கலந்து…

“என்னங்க குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க கொஞ்சம் பகல் டைம்ல குடிக்காம இருக்கலாமே” என்பார்கள் மனைவிகள். இன்னும் சில மனைவிகள்.”என்னங்க இப்படி அளவுக்கு அதிகமா குடிக்கிறீங்களே.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்களை யாரு பாத்துக்குவா?” என்பார்கள். மேலும் பலர் “வயசாகிப் போச்சுல்லா கழுதைய விட வேண்யதுதானே” என்று வசவு பாடுவார்கள் ஆனால் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள் கணவன்மார்கள்.மாறாக அன்றைய தினம் ஞயிற்றுக் கிழமையாக இருந்தது என வைத்துக் கொள்ளுங்கள்..பக்கத்து வீட்டுக் கதவைப் போய் தட்டுகிற அளவுக்கு
 

“என்னங்க குடிக்கிறதுதான் குடிக்கிறீங்க கொஞ்சம் பகல் டைம்ல குடிக்காம இருக்கலாமே” என்பார்கள் மனைவிகள். இன்னும் சில மனைவிகள்.”என்னங்க இப்படி அளவுக்கு அதிகமா குடிக்கிறீங்களே.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்களை யாரு பாத்துக்குவா?” என்பார்கள். மேலும் பலர் “வயசாகிப் போச்சுல்லா கழுதைய விட வேண்யதுதானே” என்று வசவு பாடுவார்கள் ஆனால் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள்

கணவன்மார்கள்.மாறாக அன்றைய தினம் ஞயிற்றுக் கிழமையாக இருந்தது என வைத்துக் கொள்ளுங்கள்..பக்கத்து வீட்டுக் கதவைப் போய் தட்டுகிற அளவுக்கு பகலிலேயே குடித்து முடித்து விடுவார்கள்.
இங்கிலாந்து மகராணியும் அப்படித்தான்…இங்குள்ள மனைவியர்கள் போல் அங்குள்ள அரசாங்கம் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் எள் அளவும் பிரயோஜனம் இல்லை. அவர் வயதையும் மீறி பகலில் குடிப்பதோடு

மட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமாகவும் குடிக்கிறார்.அதுவும் மத்தியான வெயிலில்தான் தனது மதுக் கச்சேரியை ஆரம்பிக்கிறாராம்…?
இங்கிலாந்து மகராணியான இரண்டாம் எலிசபெத்தின் பெயர் எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி ஆகும்.அவருக்கு 95 வயதாகிறது. ஐக்கிய நாடுகள் உள்பட 16 நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக இருக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பொதுநலவாரியத்தின் தலைவரும் இவரே. இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநரும் ஆவார்.


கடந்த 64 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்..1947 ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தினமும் அளவே இல்லாமல் அவர் மது அருந்துவதாக அங்குள்ள “இன்டிபென்டன்ட்” என்ற செய்தி நிறுவனம் மூலம் தகவல் தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி இதுதான்… இங்கிலாந்து மகராணி தினமும் மது அருந்துகிறார். அவர் தமது மதியச் சாப்பாடுக்கு முன்னர் மது அருந்தும் வழக்கமுடையவராக இருக்கிறார். அவர் ஜின், ஒயின் ஆகிய மதுவகைகளை அருந்துகிறார்.


மதிய வேளையில் ஜின்னையும், ஒயினையும் ஒன்றாக கலக்குகிறார். அத்துடன் எலுமிச்சை சாறைப் பிழிகிறார். குளிர்ந்த ஐஸ் கட்டிகளைப் போட்டு மிக ரம்யமாக குடிக்கிறார்.இதே போல் மாலையிலும் குடிக்கிறார்.தினமும் அவர் குடிக்கும் மதுவின் அளவு 6 யூனிட் ஆகும். இதன்படி அவர் வாரத்திற்கு 40.6 யூனிட் மது அருந்கிறார் என ‘இன்டிபென்டன்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டுக் கணக்குப்படி ஒரு யூனிட் என்பது 25 மில்லி ஆகும். இதன்படி இங்கிலாந்து மகராணி ஒரு நாளைக்கு 150 மிலி மது குடிக்கிறார். வாரத்திற்கு 1000 மில்லி அளவுக்கு குடிக்கிறார்.அங்குள்ளவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அங்குள்ள அரசாங்கம் இங்கிலாந்துப் பெண்கள் எவ்வளவு மது அருந்தலாம் என வரையறுத்து வைத்துள்ளது.மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்தும் பெண்கள் வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.ஆனால் இங்கிலாந்து மகராணியோ தனது 95 வயதிலும் இரண்டு மடங்கு கூடுதலாக மது அருந்துகிறார்…அதுவும் பட்டப்பகலில்..