×

இறப்பு விகிதம் 14 சதவிகிதம் – மெக்ஸிகோவில் கொரோனாவின் கோரத் தாண்டவம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 28 லட்சத்து 61 ஆயிரத்து 688 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 21 நாட்களுக்குள் 28 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனாவினால் அதிகப் பாதிப்புள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. ஆயினும் இங்கு இறப்பு விகிதம் பெரிய அளவில் இல்லை. சுமார் 12 கோடி மக்கள் கொண்ட மெக்ஸிகோவில் கொரோனா பரவல் கடந்த இரு வாரங்களாக கட்டுக்கடங்காமல்
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 28 லட்சத்து  61 ஆயிரத்து 688 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 21 நாட்களுக்குள் 28 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனாவினால் அதிகப் பாதிப்புள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. ஆயினும் இங்கு இறப்பு விகிதம் பெரிய அளவில் இல்லை.

சுமார் 12 கோடி மக்கள் கொண்ட மெக்ஸிகோவில் கொரோனா பரவல் கடந்த இரு வாரங்களாக கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இன்றைய (ஆகஸ்ட் 21) நிலவரப்படி, 5 லட்சத்து 43 ஆயிரத்து 806 பேர்.

மெக்ஸிகோவின் மக்கள் தொகை கணக்கில் கொண்டு இந்த எண்ணிக்கை அதிகம் இல்லை என்றாலும்கூட இறந்தவர்களின் எண்ணிக்கை பெரும் அச்சத்தை அளிக்கிறது. ஆம், மொத்தம் 59 ஆயிரத்து 106 பேர் இறந்திருக்கிறார்கள். முடிக்கப்பட்ட கேஸ் லிஸ்ட்டில் மொத்தம் உள்ள 430,744  பேரில் 3,71,638 பேர் குணமடைந்துள்ளனர். இறந்தவர்கள் 59,106. அதாவது இறப்பு விகிதம் 14 சதவிகிம்.

ஏனெனில் உலகளவில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இந்த விகிதம் உள்ளது. இந்தியாவில் 2 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவில் தீவிர நடவடிக்கை எடுத்தும் பெரிய அளவுக்குப் பலன் கொடுப்பதாகத் தெரியவில்லை. இன்று மட்டுமே 6775 பேர் புதிய நோயாளிகளாகவும் 625 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர்.