×

அமெரிக்க அதிபரின் தம்பி ராபர்ட் ட்ரம்ப் மரணம்

அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்பின் தம்பி ராபர்ட் ட்ரம்ப் மரணம் அடைந்தார். ராபர்ட் டொனால்ட் அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர், இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால், அவர் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சை பெற்றுவந்த ராபர்ட் டிரம்பை, அவரின் அண்ணனும் அமெரிக்க அதிபருமான டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். ஆனால், அதுவே அவரை உயிரோடு பார்த்த கடைசி முறை.
 

அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்பின் தம்பி ராபர்ட் ட்ரம்ப் மரணம் அடைந்தார்.

ராபர்ட் டொனால்ட் அமெரிக்காவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர், இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால், அவர் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிரச் சிகிச்சை பெற்றுவந்த ராபர்ட் டிரம்பை, அவரின் அண்ணனும் அமெரிக்க அதிபருமான டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். ஆனால், அதுவே அவரை உயிரோடு பார்த்த கடைசி முறை. அடுத்த நாளே ராபர்ட் ட்ரம்ப் மரணம் அடைந்தார்.

அதிபர் டொன்லாட் ட்ரம்ப்க்கு, ராபர்ட் ட்ரம்ப் பெரிய பலமாக விளங்கினார். பல்வேறு சட்ட வழக்குகளைச் சந்தித்தவர் ராபர்ட் ட்ரம்ப். அவரின் இழப்பு டொனால்டு ட்ரம்பை உலுக்கி விட்டது.

டொனால்டு ட்ரம்பை விட மூன்று வயது குறைந்தவர் ராபர்ட் ட்ரம்ப்.

தனது தம்பியின் மரணத்தின் அஞ்சலி செய்தியாக ட்ரம்ப், ‘ராபர்ட் என் சகோதரன் மட்டுமல்ல, சிறந்த நண்பன். அவன் இல்லாதாதை கனத்த மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்’ என்பதாக உருக்காமாகப் பதிவிட்டுள்ளார்.