×

புகழ்பெற்ற தென்கொரிய சினிமா இயக்குநர் கிம்-கி-டக் மரணம்

வெனிஸ் விருது பெற்ற கிம்-கி-டக் இன்று இறந்துவிட்டார். உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கிம்-கி-டக். கிம் – கி – டக்கின் திரைப்படங்கள் அதிர்ச்சியை தரக்கூடிய வகையைச் சேர்ந்தவை. அழகியலுக்கும் குரூரத்திற்கும் ஒரு நூல்தான் வேறுபாடு என்பதை நேர்த்தியோடு சொல்லும் பட வகை கிம்மின் படங்கள். பலர் அவர் படங்களை கொண்டாடி தீர்த்தாலும் சிலருக்கு ஒவ்வாமையோடு இருப்பார்கள். அதுவே அவரின் வெற்றி என்றும் சொல்லப்படுவதுண்டு. மனித மனங்களில் இருட்டையும் வெளிச்சத்தையும் அவரைப்போல திரையில் கொண்டுவந்த இயக்குநர்களை
 

வெனிஸ் விருது பெற்ற கிம்-கி-டக் இன்று இறந்துவிட்டார். உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கிம்-கி-டக்.

கிம் – கி – டக்கின் திரைப்படங்கள் அதிர்ச்சியை தரக்கூடிய வகையைச் சேர்ந்தவை. அழகியலுக்கும் குரூரத்திற்கும் ஒரு நூல்தான் வேறுபாடு என்பதை நேர்த்தியோடு சொல்லும் பட வகை கிம்மின் படங்கள்.

பலர் அவர் படங்களை கொண்டாடி தீர்த்தாலும் சிலருக்கு ஒவ்வாமையோடு இருப்பார்கள். அதுவே அவரின் வெற்றி என்றும் சொல்லப்படுவதுண்டு. மனித மனங்களில் இருட்டையும் வெளிச்சத்தையும் அவரைப்போல திரையில் கொண்டுவந்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

59 வயதான கிம் – டு – டக் இன்று மரணமடைந்தார்.