×

பிரதமரே இப்படி உடை அணியலாமா? விமர்சனத்துக்குப் பதிலடி தந்த பெண்கள் #SannaMarin

பின்லாந்து பிரதமர் சன்னா மரினைச் சுற்றி தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சன்னா மரின் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தவர். தனது 34 வயதிலேயே பிரதமராகப் பதவியேற்றவர். உலகின் குறைந்த வயது பெண் பிரதமர் எனும் பெருமைக்கு உரியவர். பெண்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்க விரும்புபவர் சன்னா மரின். அதனால்தான் அவரின் அமைச்சரவையில் 12 பெண்களும் 7 ஆண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11. இந்த நாளை அர்த்தப்பூர்வமாகக் கொண்டாட ஆவா முர்டோ எனும்
 

பின்லாந்து பிரதமர் சன்னா மரினைச் சுற்றி தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. சன்னா மரின் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தவர். தனது 34 வயதிலேயே பிரதமராகப் பதவியேற்றவர். உலகின் குறைந்த வயது பெண் பிரதமர் எனும் பெருமைக்கு உரியவர். பெண்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிக்க விரும்புபவர் சன்னா மரின். அதனால்தான் அவரின் அமைச்சரவையில் 12 பெண்களும் 7 ஆண்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11. இந்த நாளை அர்த்தப்பூர்வமாகக் கொண்டாட ஆவா முர்டோ எனும் 16 வயது சிறுமியை ஒருநாள் பிரதமராக அமர வைத்திந்தார் சன்னா மரின்.

இந்நிலையில் ஒரு பத்திரிக்கைக்கு உள்ளாடை அணியாமல் சன்னா மரின் அளித்த போட்டோ போஸ் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமரே இப்படி உடை அணிந்து போஸ் கொடுக்கலாமா? என்று வழக்கமான ஆணாதிக்க கண்ணோட்டத்தோடு பலர் விமர்சனம் செய்தார்கள். இது சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது.

ஆண்களின் இந்த விமர்சனத்திற்கு பதிலடியாக சன்னா மரினுக்கு ஆதரவாகப் பெண்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். #iamwithsanna எனும் ஹேஷ்டேக்கில் சன்னா மரின் அளித்த போஸ் போலவே தங்களின் படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு பெண் எப்படி உடை அணியலாம் என்பதை மற்றவர் முடிவு செய்ய வேண்டாம் என்று அழுத்தமாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.