×

44 நாடுகளுக்கு பறந்த இந்திய வகை கொரோனா – எச்சரிக்கை விடுத்த WHO

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதைக் கடந்த இரு மாதங்களாக உலகமே கவனித்துவருகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது
 

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதைக் கடந்த இரு மாதங்களாக உலகமே கவனித்துவருகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளது.

இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய வைரஸ் பயங்கர வீரியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் இந்தியாவிலிருந்து வருபவர்களால் இந்தப் புதிய வகை வைரஸ் பரவலாம் என்பதால் பல்வேறு நாடுகள் போக்குவரத்து தடையை அறிவித்தன. இருப்பினும் இந்தியாவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உருமாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ்கள் இந்தியா தவிர்த்து பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவிலும் தோன்றியிருக்கின்றன. புதிய வகை வைரஸ்கள் ஒரிஜினல் வைரஸ்களை விட அதிக ஆபத்து நிறைந்ததாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், அதிக பலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை உருமாற்றமடைந்த வைரஸ்கள் மற்ற வைரஸ்களைக் காட்டிலும் அதி வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்தான் மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாகப் பரவுகின்றன. இருப்பினும் தற்போது அளிக்கப்படும் சிகிச்சையும் தடுப்பூசிகளும் ஓரளவுக்கு இந்திய வகை வைரஸை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் பிரிட்டன் வகை வைரஸ் தடுப்பூசிகளையே எதிர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் பி.1.617 உருமாறிய வைரஸ்கள் வேகமாகப் பரவுவதற்கு மத நிகழ்வுகளை அரசு அனுமதித்தது தான் காரணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.