×

இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு

லண்டன்: இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது இங்கிலாந்து தனது மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கையை 55-ஆக பதிவு செய்துள்ளது. இது மார்ச் 23 முதல் நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்ததைவிட மிகக் குறைந்த அளவாகும். லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா நோயால் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 40,597-ஆக உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும்
 

லண்டன்: இங்கிலாந்தின் மிகக் குறைந்த கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை 55-ஆக பதிவு ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின்போது இங்கிலாந்து தனது மிகக் குறைந்த தினசரி இறப்பு எண்ணிக்கையை 55-ஆக பதிவு செய்துள்ளது. இது மார்ச் 23 முதல் நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இருந்ததைவிட மிகக் குறைந்த அளவாகும். லண்டன் மருத்துவமனைகளில் கொரோனா நோயால் புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 40,597-ஆக உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக கொரோனாவால் புதிய இறப்புகள் எதுவும் நிகழவில்லை. ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஏற்கனவே பேசுகையில், பிராந்தியத்தின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் ஜூன் 18 அன்று மேலும் குறையும் என்று நம்புவதாகக் கூறினார்.