×

“பிணங்களால் ஒளிரும் இந்தியா” – உலகத்திற்கு ஒரு மோசமான முன்னுதாரணம்!

கொரோனா இரண்டாம் அலை பரவல் முதல் அலையைக் காட்டிலும் அதிதீவிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். கொரோனா ஒருபுறம் வாட்டி வதைக்கிறது என்றால் நம் நாட்டின் மருத்துவக் கட்டமைப்போ மொத்தமாக ஆட்டம் கண்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை வசதி,
 

கொரோனா இரண்டாம் அலை பரவல் முதல் அலையைக் காட்டிலும் அதிதீவிரமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்து 46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். கொரோனா ஒருபுறம் வாட்டி வதைக்கிறது என்றால் நம் நாட்டின் மருத்துவக் கட்டமைப்போ மொத்தமாக ஆட்டம் கண்டிருக்கிறது.

source reuters

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. ஆக்சிஜன், ரெம்டெசிவிர், படுக்கை வசதி, கொரோனா தடுப்பூசி, ஆம்புலன்ஸ் வசதி என அனைத்திற்குமே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் வாசல்களிலேயே நோயாளிகள் பலர் உயிரை விடுகின்றனர்.

மரண ஓலம் காதைக் கிழிக்கிறது. தற்போது டெல்லியில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் மிகப்பெரிய மருத்துவமனையிலேயே 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் அரை மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதால் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் ஊசலாடுகின்றன. இறந்தால் கூட நிம்மதியாக புதைக்கவோ, எரிக்கவோ இடுகாடுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் ஒரே இடத்தில் பல பிணங்களை எரித்த புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பிணங்கள் மீது எரியும் நெருப்பால் இந்தியா ஒளிர்கிறது என பலரும் விமர்சித்திருந்தனர்.

கொரோனாவால் இந்தியா மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருப்பதாக மருத்துவ நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்கின்றனர். டெல்லி உயர் நீதிமன்றமோ பிச்சை எடுத்தாவது மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசின் தலையில் குட்டு வைத்துள்ளது. ஆனால் மத்திய அரசோ கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மாநிலங்களின் பொறுப்பு என்கிறது. ஆரம்பக் காலங்களில் ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி எதையும் வாங்க அனுமதிக்காமல் எங்களின் பொறுப்பு என்றால் என்ன நியாயம் என மாநில அரசுகள் மத்திய அரசை நோக்கி ஆவேசத்துடன் கேள்வியெழுப்புகிறார்கள்.

இச்சூழலில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இந்தியாவை மோசமாக முன்னுதாரணமாகப் பேசியிருக்கிறார். ஒரு வைரஸ் எப்பேர்பட்ட பேரழிவை உருவாக்கும் என்பதற்கு இந்தியா தான் சான்று என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவை தலைகுணிய வைத்துவிட்டதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.