×

மக்களே உஷார்…! கொரோனா இரண்டாம் அலை “மிகவும் ஆபத்தானது” – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. முதல் அலையை விட வேகமாகப் பரவி வரும் இரண்டாம் அலையின் தாக்கம் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி,
 

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. முதல் அலையை விட வேகமாகப் பரவி வரும் இரண்டாம் அலையின் தாக்கம் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலை முதல் அலையை விட “மிகவும் ஆபத்தானது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் மிகச் சவாலானதாக இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலையின் நடுப்பகுதியில் இந்தியா உள்ளது. இது முதல் அலையை விட மிக மோசமாகியுள்ளது கவலையளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே சரியான வழிமுறையாகும்” என்றார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 26 ஆயிரத்து 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரத்து 207 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36 லட்சத்து 73 ஆயிரத்து 802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.