×

இந்தியாவுக்கு மேலும் 25% வரி! மொத்தம் 50% - ட்ரம்ப் அதிரடி

 

இந்தியாவுக்கு மேலும் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று மேலும் 25 சதவீதம் வரி விதிப்பை அறிவித்தார். இதனால் இந்தியப் பொருட்களின் மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்.  புதிய வரி விதிப்பு தொடர்பான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்துட்டுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆக.31ல் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சீனாவுக்கு 30% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட அதிகமாக இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.