×

அசுர வேகத்தில் பரவும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்து 68ஆயிரத்து 510 ஆக உயர்வு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு
 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 65 லட்சத்து 68ஆயிரத்து 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 87ஆயிரத்து 957 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 31 லட்சத்து 69 ஆயிரத்து 243 பேர் குணமாகியுள்ளனர்.