×

மலேசியாவில் கொரோனா வைரஸ் திரிபு – 10 மடங்கு வேகத்தில் பரவும் ஆபத்து

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 450 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 18 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 184 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 072 பேர். இன்னும் பல தகவல்கள்
 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 18 லட்சத்து  26 ஆயிரத்து 450 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 7 நாட்களுக்குள் 18 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 184 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 072 பேர்.

இன்னும் பல தகவல்கள் கொரோனா குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பேரச்சம் தரும் தகவல் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்தபோது அது கொரோனா வைரஸ் திரிபு (corona virus strain) எனக் கண்டறியப்பட்டது.

இந்த வகை, கொரோனா வைரஸ் D614G என்று குறிப்பிட்டப்படுகிறது. இந்த வகை வைரஸ் என்பது கோவிட் 19 யை விட பத்து மடங்கு வேகத்தில் மற்றவருக்கு பரவும் ஆபத்து இருப்பதாக மலேசிய டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவிக்கிறார்.

கொரோனா வைரஸ் D614G வகை தாக்குதல் ஆனவரை சூப்பர் ஸ்பிரெட்டர் என்று கூறுகிறார்கள். அந்தளவுக்கு இவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் வேகம் அதிகமாம்.

இதனால் மலேசியாவில் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். அங்கு ஏற்கெனவே, கொரோனா பாதிப்புள்ளவர்கல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மறுத்தவர்களுக்கு சிறைதண்டனை எனும் சட்டம் அமலில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் ஒருவருக்கு இதே வகை இருந்தது கண்டறியப்பட்டது.