×

டிசம்பரில் கொரோனா தடுப்பூசி – ஃபைசர் கம்பெனி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 90,38,030 பேரும், இந்தியாவில் 79,90,322 பேரும், பிரேசில் நாட்டில் 54,40,903 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் என்ற நிலையை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. இதுவரை அதிகாரபூர்வமாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருப்பது ரஷ்யா மட்டுமே. ஃபைசல் எனும் புகழ்பெற்ற மருந்து நிறுவனம் நியூயார்க்கை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 170க்கும் மேற்பட்டு இயங்கி வரும் பழமை வாய்ந்த நிறுவனம்
 

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 90,38,030 பேரும், இந்தியாவில் 79,90,322 பேரும், பிரேசில் நாட்டில் 54,40,903 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் என்ற நிலையை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. இதுவரை அதிகாரபூர்வமாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருப்பது ரஷ்யா மட்டுமே.

ஃபைசல் எனும் புகழ்பெற்ற மருந்து நிறுவனம் நியூயார்க்கை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 170க்கும் மேற்பட்டு இயங்கி வரும் பழமை வாய்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஃபைசல் கம்பெனியின் சிஇஒ ஆல்பர்ட் போர்லா பேசுகையில், “எங்கள் ஆய்வில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து, இப்போது சென்றுகொண்டிருக்கும் பரிசோதனைகளில் வெறிக்கரமாக முடியும்பட்சத்தில், அமெரிக்க அரசு எங்கள் கண்டுபிடிக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த வருடம் டிசம்பருக்குள் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பிருக்கிறது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

அவர் சொன்னவிதம் எல்லாமும் சரியாக நடக்கும்பட்சத்தில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்குள் 10 கோடி டோஸ்களைக் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.