×

இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா பரிசோதனை

உலகளவில் பேரச்சத்தை தந்துகொண்டிருக்கிறது கொரோனா. சாதாரண மனிதர்கள் முதல் அமெரிக்க அதிபர் வரை அதன் கோர கரம் நீண்டுகொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 48 ஆயிரத்து 780 பேர். கொரோனா நோய்த் தொற்று முதன்முதலாலப் பாதித்த நாட்டின் பிரதமர் என்றால், அது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்தான். சுமார் இரண்டு
 

உலகளவில் பேரச்சத்தை தந்துகொண்டிருக்கிறது கொரோனா. சாதாரண மனிதர்கள் முதல் அமெரிக்க அதிபர் வரை அதன் கோர கரம் நீண்டுகொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 748 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 48 ஆயிரத்து 780 பேர்.

கொரோனா நோய்த் தொற்று முதன்முதலாலப் பாதித்த நாட்டின் பிரதமர் என்றால், அது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்தான். சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை அளித்த பிறகே அவர் குணமடைந்தார்.

தற்போது இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால், தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க பல பணிகளை முன்நின்று செய்கிறார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அதனால், அவர் தனக்கு கொரோனா பரிசோதனையை மீண்டும் செய்துகொண்டிருக்கிறார்.

இங்கிலாந்தில் தற்போதைய நிலவரப்படி, 11 லட்சத்து 46 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 48, 475 பேர் மரணமடைந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கி விட்டது. அக்டோபரில் மிக வேகமாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. அக்டோபர் 26-ம் தேதி ஒரே நாளில் 26,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆயினும் முந்தைய அலையைப் போல மரணிப்போர் எண்ணிக்கை பெருமளவில் இல்லாததது சற்று ஆறுதல் அளிக்கக்கூடியது.