×

“மண்டைக்குள்ள புகுந்து மென்ட்டலாக்குதாம்” -கொரானாவின் அடுத்த குண்டு

உலகில் கொரானா வைரஸ் தொற்றி பல கோடிக்கணக்கோனோர் பாதித்து வரும் நிலையில் அதைப்பற்றி தினமும் புது புதுத்தகவல் வந்து மக்களை அதிர்ச்சியளிக்க வைக்கிறது . உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நேற்று கொரானா பற்றி ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் .அதில் கொரானா உலகில் பரவியதிலிருந்து பல மில்லியன் பேர் மனநல பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் .மேலும் இந்த வைரசால் மன நல காப்பகங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கோனார் பாதிக்கபட்டுள்ளதாகவும் ,அவர்களை கண்டு
 

உலகில் கொரானா வைரஸ் தொற்றி பல கோடிக்கணக்கோனோர் பாதித்து வரும் நிலையில் அதைப்பற்றி தினமும் புது புதுத்தகவல் வந்து மக்களை அதிர்ச்சியளிக்க வைக்கிறது .


உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நேற்று கொரானா பற்றி ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் .அதில் கொரானா உலகில் பரவியதிலிருந்து பல மில்லியன் பேர் மனநல பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் .
மேலும் இந்த வைரசால் மன நல காப்பகங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கோனார் பாதிக்கபட்டுள்ளதாகவும் ,அவர்களை கண்டு சிகிச்சையளிப்பது கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார் .
மேலும் இந்த வைரஸால் மனநல சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பலரும் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் ,மனநல பாதிப்புக்குள்ளான முதியோர்கல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,பல மனநல சிகிச்சை மையங்கள் கொரானா மருத்துவமனையாக இதனால் மாற்றப்பட்டுள்ளதாகவும் ,நடுத்தர மக்களிடையே இந்த மனநல பாதிப்புகள் அதிகமாக இப்போது இருப்பதாகவும் .அவர்கள் சிகிச்சைக்கு வருவது குறைவாக இருப்பதால் அவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டுமென்று கூறினார் .
அதனால் வரும் அக்டோபர் 10 ம் தேதியன்று ,உலக மனநல பாதிப்பு நாளன்று இந்த மனநல பாதிப்புக்குள்ளானவர்களின் சிகிச்சைக்கு அதிக நிதி ஒதுக்கி ,அவர்களை வைரஸ் பாதிப்பின் ரிஸ்க்கிலிருந்து காப்பாற்ற வேண்டியுள்ளார் .