×

அமெரிக்காவின் முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று!

உலகில் பல முக்கிய நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவி வருகிறது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது சிகிச்சையால் குணமடைந்தனர். அதேபோல பிரிட்டன், பிரேசில் எனப் பல நாட்டின் முக்கியத் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் டேவிட் பெர்ன்ஹார்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், டேவிட் பெர்ன்ஹார்ட்டுடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
 

உலகில் பல முக்கிய நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவி வருகிறது. அமெரிக்காவின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது சிகிச்சையால் குணமடைந்தனர்.

அதேபோல பிரிட்டன், பிரேசில் எனப் பல நாட்டின் முக்கியத் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் டேவிட் பெர்ன்ஹார்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், டேவிட் பெர்ன்ஹார்ட்டுடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. யார் மூலம் இவருக்குக் கொரோனா தொற்றியது என்று கண்டறிய முடியவில்லை. ஆயினும், பெரியளவில் மாறுதல் இல்லாத அளவுதான் இவருக்குப் பாதிப்பு இருக்கிறது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,73,94,314 பேர். இவர்களில் 1,01,70,788 பேர் குணமடைந்து விட்டனர். 3,14,629 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

எனவே, கொரோனா தடுப்பூசியை அவசரக் காலப் பயன்பாட்டுக்கு செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இரண்டு நாட்களாக ஃபைசர் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் அவசரக் காலப் பயன்பாட்டுக்குச் செலுத்தப்படுகிறது. அடுத்து மாடர்னா கொரோனா தடுப்பூசியும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.