×

கமலா ஹாரீஸ் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய போட்டோ நீக்கம்

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். கமலா ஹாரீஸைக் குறி வைத்து ட்ரம்ப் பிரசாரம் செய்துவருகிறார். கமலா ஒரு கம்யூனிஸ்ட் என்றும் ஜோ பைடன் அதிபரானால் சில மாதங்களில் கமலா
 

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

கமலா ஹாரீஸைக் குறி வைத்து ட்ரம்ப் பிரசாரம் செய்துவருகிறார். கமலா ஒரு கம்யூனிஸ்ட் என்றும் ஜோ பைடன் அதிபரானால் சில மாதங்களில் கமலா ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் கமலா ஹாரீஸின் சகோதரி மகள் மீனா ஹாரீஸ் ஒரு படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் கமலா ஹாரீஸ் கடவுள் துர்க்கா போலவும் அதிபர் ட்ரம்ப்பை வதைப்பதுபோலவும் அப்படம் சித்திரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்துக்கு கடும் விமர்சனம் எழுந்தது.

இந்து மதத்தினரைப் புண்படுத்துபடியாக இருப்பதாகப் பலரும் கமெண்ட் செய்தார்கள். இது பெரிய விஷயமாக மாறுவதை உணர்ந்த மீனா ஹாரீஸ் அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.