×

“மற்ற நாடுகள் திணறுது ,சீனா மட்டும் வளருது” -வைரசை விட்டவன் வேலைய பாருங்க

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் வூகான் நகரின் ஒரு மீன் சந்தையில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .அது அமெரிக்கா ,ஜப்பான் ,இத்தாலி ,பிரேசில் ,ஜெர்மன் ,ஆஸ்திரேலியா பிரிட்டன் போன்ற 200 நாடுகளுக்கும் மேலாக பரவி பல லட்சக்கணக்கான மக்களை கொன்று ,கோடிக்கணக்கான மக்களை பாதித்து அவதிப்பட வைத்துள்ளதுஅது
 

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது .


2020ம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் வூகான் நகரின் ஒரு மீன் சந்தையில் தோன்றிய கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .அது அமெரிக்கா ,ஜப்பான் ,இத்தாலி ,பிரேசில் ,ஜெர்மன் ,ஆஸ்திரேலியா பிரிட்டன் போன்ற 200 நாடுகளுக்கும் மேலாக பரவி பல லட்சக்கணக்கான மக்களை கொன்று ,கோடிக்கணக்கான மக்களை பாதித்து அவதிப்பட வைத்துள்ளது
அது பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னும் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவி வருகிறது .இந்நிலையில் இந்த வைரஸால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை உலகில் சீனாவை தவிர அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றன .
கடந்த வாரம் எடுக்கப்பட்ட பொருளாத வளர்ச்சியின் கணக்கெடுப்பில் இந்தியா மைனஸ் 23.9%வீழ்ச்சியடைந்துள்ளது .மேலும் பிரிட்டன் -20.9%,மற்ற ஐரோப்பிய நாடுகளும் மைனஸில் வீழ்ச்சியடைந்த நிலையில் உலகிற்கு வைரஸை வாரி வழங்கிய சீனாவின் பொருளாதார வளர்ச்சி மட்டும் +3.2சதவீதமாக உயர்ந்துள்ளது .இதனால் உலகிற்கு வைரஸை பரப்பிவிட்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது .