BREAKING: நேபாளம்: 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்து..
Jul 24, 2024, 11:51 IST
நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி எரிவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நேபாளம் தலைநகர் காட்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. காட்மண்டு திரிபுவன் சந்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. ஓடுதளத்தில் சென்றபோதே கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கீழே விழுந்த விமானம் திப்பற்றி எரியத் தொடங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது.