×

கூலி வேலைக்கு துபாய்க்கு சென்ற கடலூர் காரர் மரணம்… உடலைக் கொண்டு அரசிடம் உதவி கோரும் குடும்பம்!

கூலி வேலைக்காக துபாய் சென்று இறந்த பாலகிருஷ்ணனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர போராடுகின்றனர் அவரின் குடும்பத்தினர். பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். துபாய்க்கு வேலைக்குச் சென்றிருந்தபோது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால், அவரின் உடலை எடுத்து வருவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர் குடும்பத்தினர். பாலகிருஷ்ணனின் அண்ணன் மகன் பாரதிதாசனிடம் பேசினேன். “சித்தப்பா, 13 வருஷங்களாக வெளிநாட்டில்தான் வேலை செய்யறாங்க. அதுவும் துபாயில் ஒரே கம்பெனியில்தான் லேபராக வொர்க் பண்றாங்க. இப்போ
 

கூலி வேலைக்காக துபாய் சென்று இறந்த பாலகிருஷ்ணனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர போராடுகின்றனர் அவரின் குடும்பத்தினர்.

பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள வடகராம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். துபாய்க்கு வேலைக்குச் சென்றிருந்தபோது உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால், அவரின் உடலை எடுத்து வருவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர் குடும்பத்தினர்.

பாலகிருஷ்ணனின் அண்ணன் மகன் பாரதிதாசனிடம் பேசினேன். “சித்தப்பா, 13 வருஷங்களாக வெளிநாட்டில்தான் வேலை செய்யறாங்க. அதுவும் துபாயில் ஒரே கம்பெனியில்தான் லேபராக வொர்க் பண்றாங்க. இப்போ ஏழு மாசத்துக்கு முன்னாடிதான் லீவுல ஊருக்கு வந்துட்டு போனாங்க.

பத்து நாளைக்கு முன்னால வேலை செய்திட்டு இருக்கும்போது உடம்பு சரியில்லாம போயிருக்கு. அதனால ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. அங்கே டெஸ்ட் பண்ணிப் பார்த்தப்ப மூளையில் கட்டி இருக்கிறதா சொல்லியிருக்காங்க. ’சரி, நான் ஊர்ல போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்’னு சொல்லியிருக்காங்க. ஹாஸ்பிட்டலை விட்டு கிளம்பும்போது மயக்கம்போட்டு விழுந்துட்டாங்களாம். அப்படியே கோமாவுக்கு போயிட்டாங்களாம். எங்களுக்குத் தெரியாது.

மூணு, நாலு நாளா சித்தப்பாகிட்டேயிருந்து போன் ஏதும் வரலையேன்னு அங்கே உள்ள எங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா விசாரிக்க சொன்னோம். அப்போதான் சித்தப்பாவோட நிலைமை தெரிஞ்சுது. இன்னிக்கு காலையில என்னாச்சுன்னு தெரியல, திடீர்ன்னு சித்தப்பா இறந்துட்டாங்க, அவங்க உடலை ஊருக்குக் கொண்டு வரணும்’ என்கிறார் துயரம் கசிந்த குரலில்.

துபாயில் இறந்த பாலகிருஷ்ணனனுக்கு சுமார் 45 வயது இருக்கும். பெரியளவில் பொருளாதார பின்புலம் இல்லாத குடும்பம். பாலகிருஷ்ணனுக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அதிலும் இருவர் மிகச் சிறிய குழந்தைகள். பாலகிருஷ்ணனின் உடலை ஊருக்கு எடுத்துவர அரசுதான் உதவ வேண்டும் என காத்திருக்கிறார்கள் அக்குடும்பம்.

வழக்கமான காலத்தில் ஒருவர் வெளிநாட்டில் இறந்தால், அவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது பெரும் சவாலான விஷயம். இப்போது கொரோனா நோய்த் தொற்ற் உலகையே அச்சுறுத்தும் நிலையில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருக்கும் இந்தச் சூழலில் பாலகிருஷ்ணனின் உடல் கடலூருக்கு வருவதற்கு பெரு பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். மத்திய, மாநில அரசுகள் உதவினால் பாலகிருஷ்ணன் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வருவது எளிதாகும்.