ஈரான் தலைவர் மரணம்- பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் 9 பேர் பலி
Mar 1, 2026, 17:11 IST
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது காமேனி ஆதரவாளர்கள் கற்களை வீசியும், கட்டையாலும் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை அடித்து நொறுக்கியதை அடுத்து, எதிர்ப்பு நடவடிக்கையாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.