×

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு!

 

பிரிட்டன் அரசியலில் முக்கியத் திருப்பமாக, ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் (Labour Party) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.

இங்கிலாந்து பிரதமராக  நாளை பதவியேற்கிறார் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆண்டி பர்ன்ஹாம். உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்ததால், பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகினார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆண்டி பர்ன்ஹாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 2026) அன்று போட்டியின்றி கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து,  பிரிட்டனின் ஏழாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.