×

உலக சுகாதார மையத்தின் முக்கிய பொறுப்பில் ஓர் இந்தியர்!

1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது உலக சுகாதார மையம். இது ஐநாவின் ஓர் அங்கம். உலகம் முழுவதும் நோய் தடுப்பு, முதல் உதவி, வறுமை ஒழிப்பு என்பதை முதல் கடமையாகக் கொண்டு சுகாதார பணியாற்றுவதே இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம். இதன் தலைமையிடம் ஜெனிவாவில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் டெட்ரோஸ் அடானோம். இவரின் பணிகள் கொரோனா காலத்தில் பலரின் பாராட்டுகளைப் பெறும் விதத்தில் அமைந்திருந்தன. உலக சுகாதார மையம் அடுத்த ஆண்டில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்க
 

1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது உலக சுகாதார மையம். இது ஐநாவின் ஓர் அங்கம். உலகம் முழுவதும் நோய் தடுப்பு, முதல் உதவி, வறுமை ஒழிப்பு என்பதை முதல் கடமையாகக் கொண்டு சுகாதார பணியாற்றுவதே இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம்.

இதன் தலைமையிடம் ஜெனிவாவில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் டெட்ரோஸ் அடானோம். இவரின் பணிகள் கொரோனா காலத்தில் பலரின் பாராட்டுகளைப் பெறும் விதத்தில் அமைந்திருந்தன.

உலக சுகாதார மையம் அடுத்த ஆண்டில் ஓர் அறக்கட்டளையைத் தொடங்க உள்ளது. அந்த அறக்கட்டளையின் நோக்கம், பொருளாதாரத்தின் பின் தங்கிய நாடுகளில் தேங்கியிருக்கும் சுகாதார பணிகளை முடுக்கி விடுவது. அதற்காக பணம் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு தலைமை நிர்வாகியாக அமெரிக்க வாழ் இந்தியரான அனில் சோனி என்பவரை நியமித்துள்ளது. இந்தப் பணியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இணைய விருக்கிறார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.