×

நீச்சல் குளத்தில் அரை நிர்வாண குளிக்கலாம்- ஜெர்மன் அரசு அதிரடி

 

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உலகில் 38 நாட்களில் பெண்கள் மேலாடையின்றி பொதுவெளியில் உள்ள நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 39 நாடுகளில், கடற்கரைகளில் மேலாடையின்றி குளிக்கவும், சூரிய குளியல் எடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 29 நாடுகளில் இதைப் பற்றி தெளிவான எதுவும் வகுக்கவில்லை. வல்லரசு நாடான அமெரிக்காவில், 32 மாகாணங்களில், மேலாடையின்றி சூரிய குளியல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள்,இதைவிட ஒருபடி மேலே போய் முழு நிர்வாண குளியலுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

இந்நிலையில் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலாடையின்றி குளிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருப்பது பாரபட்சமானது ஜெர்மன் சென்ட் சபையின் குறை தீர்க்கும் பிரிவில் பெண் ஒருவர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பெர்லின் நகாரட்சி இதற்கு அனுமதியளித்துள்ளது. ஜெர்மனி நகரில் உள்ள சிஜென், காட்டின் ஜென் ஆகிய நகரங்களில் ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ளது.