×

“மாஸ்க் ஆக மாறிய மலைப்பாம்பு”.. பேருந்தில் பயணித்த நபரால் அதிர்ந்து போன சக பயணிகள்!

இங்கிலாந்தில் மலைப்பாம்பை மாஸ்க் ஆக அணிந்து நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த சம்பவம் சக பயணிகளை அதிர வைத்துள்ளது. கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உலக பொது சுகாதார மையம் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மக்கள், புதிது புதிதாக மாஸ்க் அணிவது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில்
 

இங்கிலாந்தில் மலைப்பாம்பை மாஸ்க் ஆக அணிந்து நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த சம்பவம் சக பயணிகளை அதிர வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. மக்கள் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உலக பொது சுகாதார மையம் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மக்கள், புதிது புதிதாக மாஸ்க் அணிவது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஒரு நபர் பாம்பையை மாஸ்க் ஆக சுற்றிக் கொண்டு பேருந்தில் பயணித்த சம்பவம் அதிர வைக்கிறது.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் அந்த நபர், பாம்பை மாஸ்க் போல கழுத்து மற்றும் வாய் பகுதியில் சுற்றிக்கொண்டு பேருந்தில் பயணித்துள்ளார். இது பேருந்தில் பயணித்த சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பற்றி அந்த பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் பேசிய போது , ஆரம்பத்தில் அது மாஸ்க் என நினைத்ததாகவும் பேருந்து நகரத் தொடங்கியவுடன் அந்த பாம்பு நெளியத் தொடங்கிய போது தான் அது பாம்பு என்பதை அறிந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், அந்த நபர் மாஸ்க் ஆக சுற்றிக் கொண்டு வந்தது மலைப்பாம்பு போல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த இங்கிலாந்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பேருந்தில் பயணிப்பவர்கள் துணியாலான மாஸ்க் மட்டுமே அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். பேருந்தில் மலைப்பாம்பை மாஸ்க் ஆக அணிந்த அந்த நபர் பயணம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.