×

“கணவனை கழட்டி விட்டார் ,அவர் மகனை கரம் பிடித்தார்” -தாயாக போய் வளர்ப்பு மகனுக்கு தாரமாக மாறிப்போன பெண்..

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதைவிட இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறலாம் .ஆம் ,ஒரு கணவருக்கு இரண்டாம் தாரமாக போன பெண் ,அவரிடமிருந்து பிரிந்து ,அவரின் முதல் தாரத்தின் மகனை மணம் புரிந்து கொண்ட வினோதம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது . ரஷ்யாவில் கிராஸ்னோடர் கிராய் நகரைச் சேர்ந்த மெரினா பால்மாஷேவா என்ற 35 வயது பெண் , தனது முன்னாள் கணவர் 45 வயதான அரே மற்றும் அவரது மகனுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக
 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதைவிட இப்போதெல்லாம் சோசியல் மீடியாவில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறலாம் .ஆம் ,ஒரு கணவருக்கு இரண்டாம் தாரமாக போன பெண் ,அவரிடமிருந்து பிரிந்து ,அவரின் முதல் தாரத்தின் மகனை மணம் புரிந்து கொண்ட வினோதம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது .

ரஷ்யாவில் கிராஸ்னோடர் கிராய் நகரைச் சேர்ந்த மெரினா பால்மாஷேவா என்ற 35 வயது பெண் , தனது முன்னாள் கணவர் 45 வயதான அரே மற்றும் அவரது மகனுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அவர்களின் பத்தாண்டு கால கால திருமணத்திற்குப் பிறகு, மெரினாவும் அலெக்ஸியும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து சென்றனர் ..

அவர்களின் விவாகரத்துக்குப் பிறகு, தனியாக இருந்த மரியா தனது முன்னாள் கணவரின் 20 வயதான மகன் விளாடிமிர் ‘வோயா’ ஷேவிரினோடு , சமூக ஊடகத்தில் தொடர்பிலிருந்து அவரை காதலித்தார். அவர் இவரின் வளர்ப்பு மகன் என்பதால் அவரின் குணநலன்கள் இவருக்கு அத்துப்படி ,அதனால் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அவர்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களின் திருமண திட்டம் தாமதமாகின.கடைசியாக அவர்கள் கடந்த வாரம் ஒரு பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர் .இந்த திருமண புகைப்படமும் ,திருமணத்தின் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் தம்பதியரின் வீடியோவும், ஊடகத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்ஸ் பெற்றுள்ளன.