×

54 கோடியை தாண்டிய உலக அளவிலான கொரோனா பாதிப்பு

 

உலக அளவிலான கொரோனா பாதிப்பு 54 கோடியை தாண்டியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 63.30 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் சீனாவால் திட்டமிட்டே உலகம் முழுவதும் பரப்பப்பட்டதாக அமெரிக்கா ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறது. இதற்கு உரிய சான்றுகள் இல்லை என்ற போதிலும், முதன் முதலில் சீனாவில் இருந்து வைரஸ் பரவியது என்பதால் உலக நாடுகள் சீனாவின் மீது ஆத்திரத்திலேயே உள்ளனர். கொரோனா வைரஸ் தொடங்கியது முதலே அதனால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இதற்கு அடுத்ததாக இந்தியா, பிரேசில்,,பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டன. வைரஸ் தொற்று பரவ தொடங்கிய போது பெரும் சவாலை சந்தித்த சீனா, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் குறைவான அளவிலேயே பாதிப்பு பதிவாகியது. கொரோனாவால் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தன. அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.01  கோடியாக அதிகரித்துள்ள நிலையில்,  இதுவரை 51.27 கோடி பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இதுவரை உலக அளவில்  63.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரா வைரஸ் உருமாற்றம் காரணமாக உளக அளவில் கடந்த சில நாட்களாக் பாதிப்பு அதிகரித்து அருவதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று 8,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.