×

ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 43 பேரின் கதி என்ன?

 

தான்சானியாவில் உள்ள விக்டோரியா ஏரியில் விமானம் விழுந்து விபத்துள்ளானது.

தான்சானியாவின் தாஸ் எஸ் சலாமில் இருந்து முவான்சா வழியாக புகோபாவுக்கு பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் புகோபாவில் நகரில் தரையிறங்க முயற்சித்தது. அப்போது மோசமான வானிலையால் அருகில் இருந்த ஏரியில் விழுந்தது. விமானத்தில் 43 பேர் பயணித்த நிலையில், 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.  


இரண்டு விமானிகளும் விபத்தில் இருந்து தப்பினர். ஆனால் காக்பிட்டிற்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில்தான் விமானம் விழுந்துள்ளது. இந்த ஏரி புகோபா விமான நிலையத்தில் ஓடுபாதையின் ஒருமுனை கரையை ஒட்டி அமைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததாக தெரிகிறது.