×

உலகின் உயரமான பெண் முதல் முறையாக விமானத்தில் பயணம்- 6 இருக்கை ஒதுக்கீடு

 

உலகின் உயரமான பெண் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் ஒரே ஆளுக்காக 6 பேரின் இருக்கையை ஒதுக்கிய விமான நிறுவனத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் சாதனையைப் படைத்தவர் ருமேசா கெல்கி. கின்னஸ் தகவலின் படி 215.16 செமீ (7 அடி 0.7 அங்குலம்) உயரத்தில் உள்ளார். இவர் அவரது வாழ்க்கையில் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதற்காக துருக்கி ஏர்லைன்ஸ்  விமான நிறுவனம் விமானத்தின் ஆறு இருக்கைகளை அகற்றிய பிறகு, தனது விமான பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.  இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு 13 மணி நேர விமானத்தில் சென்ற அவர், நேராக அமர முடியாததால் 6 இருக்கைகளை அகற்றி அதில் படுத்து கொண்டு பயணித்து உள்ளார். 

விமான பயணத்திற்கு பிறகு பேசிய கெல்கி, இது எனது முதல் விமானப் பயணம், ஆனால் நிச்சயமாக எனது கடைசி பயணமாக இருக்காது, என்றும் தன்னுடைய பணி காரணமாக அடுத்த ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்க உள்ளதாக கூறியுள்ளார்.