×

ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது- தாலிபான்கள் உத்தரவு

 

ஆப்கானிஸ்தனில் ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்று தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் விலகி கொண்டதையடுத்து, தாலிபான் வசம் ஆட்சி கைமாறியது. இதனால் அங்குள்ள மக்கள் தாலிபான்களுக்கு பயந்து, அவர்களிடமிருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளுக்கு மக்கள் தப்பியோடினர். அன்றிலிருந்து இன்று வரை ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு அநீதிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே, பல்கலைக்கழகங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தாலிபான் அரசு தற்போது புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக ஆண் மருத்துவரை சந்திக்க முடியாது. பெண்களுக்கு கவ்லி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் மருத்துவர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவுகிறது. ஆண் மருத்துவர்கள் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால், நோய்வாய்படும் பெண்கள் உயிரிழப்புக்கு தள்ளப்படும் அபாயத்தை சந்திக்கவுள்ளனர். இந்த புது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தாலிபான் அரசுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அண்மையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அளிக்கவும் தாலிபான்களுக்கு வலியுறுத்தியது.