×

பிரிட்டன்  எலிசபெத் ராணி காலமானார்!!

 

பிரிட்டன் ராணி எலிசபெத்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96

 

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார் அவருக்கு வயது 96 . பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் .  இதையடுத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணியாக அறிவிக்கப்பட்ட இவர் ஓராண்டு காலம் வரை அதிகாரப்பூர்வமாக பட்டம் ஏற்க வில்லை.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத். ராணி மரணம் அடைந்த நிலையில் இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். பிரிட்டன் வரலாற்றில் 2வது நீண்டகால ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது