×

11,000 பேரை பணிநீக்கம் செய்த பேஸ்புக், வாட்ஸ் அப்

 

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான "மெட்டா" அதன் ஊழியர்கள் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. 


பிரபல சமூக வலைத்தளமான  "டுவிட்டரை" வாங்கிய உலக பணக்காரர் எலன் மாஸ்க், வருமானத்தை அதிகரிக்க டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்ககளின் தாய் நிறுவனம் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , நிறுவனத்தின் ஊழியர்கள் 11,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளார். அதாவது மொத்த பணியாளர்களின் 13% பேரை பணி நீக்கம் செய்துள்ளார்.  

சர்வதேச  சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 3ல் 2% சரிந்த நிலையில், வருவாய் அதிகரிக்கும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 11,000 ஊழியர்களுக்கு 16வார ஊதியம் (4 மாதம் ), ஏற்கனவே நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் 6 மாதத்திற்கான மருத்துவ படி ஆகியவை நவம்பர் 15ம் தேதி அன்று வழங்கப்படும் என்றும் புதிய பணியாளர் நியமானத்தை  1 ஆண்டு நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.  

தலைமை செயல் அதிகாரி ஜூக்கர்பெர்க் பொருளாதார வீழ்ச்சி , போட்டி அதிகரிப்பு , குறைந்த விளம்பர வருவாய் ஆகியவை எதிர்பார்த்த வருவாயை விட பலமடங்கு குறைவு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலத்தில் மெட்டாவர்ஸ் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.