×

இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியா தலையீடா ? - இந்திய தூதரகம் மறுப்பு

 

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக வெளியான குற்றச்சாட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாம மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். பின்னர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை  ராஜினாமா செய்தார்.  இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. புதிய அதிபருக்கான தேர்தலில்,  ரணில் விக்ரமசிங்கே,  இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில், அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகிய நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்திருந்த நிலையில், 134 வாக்குகள் பெற்று இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். டல்லாஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரகுமார திசாநாயகே 3 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

இதனிடையே நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக அந்நாட்டு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்ர்தலுக்கும், இந்தியாவிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும், அதிபர் தேர்தலில் இந்தியாவி  தலையீடு இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.