×

பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு.. பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம்..??

 

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை எம்.கியூ.எம் (MQM) கட்சி விலக்கிக் கொண்டது.  இதனால் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளும் இன்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என குற்றம் சாட்டியுள்ள, எதிர்க்கட்சிகள் , இம்ரான்கான் அரசு மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை ( வியாழக்கிழமை ) நடைபெற உள்ள நிலையில்,   ஏப்ரல் 3 ஆம் தேதி ஒட்டெடுப்பு நடத்தப்படும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு  அளித்து வந்த ஆதரவை  விலக்கிக்கொள்வதாக  MQM கட்சி திடீரென அறிவித்துள்ளது. அத்துடன் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.  இதன் காரணமாக இம்ரான்கான் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  முன்னதாகவே பெரும்பான்மையை இழந்துவிட்டது.

 

ஆட்சியை தக்கவைக்க மொத்தம் உள்ள 342 இடங்களில் 172  எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில்,   MQM கட்சியின் இந்த அரிவிப்பால்  இம்ரான்கானுக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது.  இதனால் பெருமான்மையை இழந்துள்ள இம்ரான்கான் அரசு   ஆட்சியை இழக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது.  அதேநேரம்   எம்.கியூ.எம்  கட்சியின் ஆதரவால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக கூடியிருக்கிறது.