×

ஹாலோவீன் திருவிழா : பலியானோர் எண்ணிக்கை 150ஆக அதிகரிப்பு.. 

 


தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை   151 ஆக  அதிகரித்துள்ளது.  

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் ஹலோவீன் திருவிழா நடைபெற்றது.  தீய ஆவிகள், துர்சக்திகள் இடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக  மக்கள்  பேய்களை போலவும், ஆவிகளை போலவும் பயமுறுத்தும் வகையிலான  முகமூடி அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டு செல்வதே  ஹாலோவின் திருவிழா ஆகும். மேற்கத்திய நாடுகளில் உள்ள பிரபலமாக  உள்ளது  இந்த ஹாலோவின் திருவிழாவில் , சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.  

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு முதல்முறையாக முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்லாது,  வெளிபுறத்தில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.  ஒரே நேரத்தில் குறுகிய தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர்  திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு எராளாமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுவரை நிகழ்விடத்திலும், மருத்துவமனையிலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் இந்த சம்பவத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 100 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  காயம்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில்,  நெரிசலில் சிக்கிய பெண்கள் கதறுவது காண்போரிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன்  மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதும் காணப்படுகிறது.  இந்த  துயர சம்பவம் தொடர்பாக  தென் கொரிய அரசு விசாரணைக்கு  உத்தரவிட்டுள்ளது.