×

வருகிற 24ம் தேதி இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே

 

வருகிற 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், விலைவாசி வின்னை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதற்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு  மக்கள் அனைரும் போராட்டத்தில் குதித்தனர்.  தொடர்ந்து பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் பலனாக முதலில் மகிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, பின்னர் அமைச்சர்கள், அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே என அனைவரும் அடுத்தடுத்து பதவி விலகினர்.  மக்கள் நெருக்கடியால் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.   இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக  கடந்த மாதம் 21 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கையில் இருந்து சிங்கப்பூர் தப்பிச்சென்ற கோத்தபய, பின்னர் விசா' காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த11ம் தேதி தாய்லாந்து சென்றார். அந்நாட்டின் பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் 24ம் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என்றும் மீண்டும் இலங்கை மக்களுக்கு சேவை செய்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.