×

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா..  ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு.. 

 

சீனாவில் வேகமெடுத்து வரும் கொரோனா பரவலினால், கடந்த ஒரு மாதத்தில் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

கொரோனாவின் பிறப்பிடமான  சீனாவில், அண்மைக்காலமாக கடந்த  உருமாறிய வைரஸ் பரவல் வேகமெடுத்திருக்கிறது.  டிசம்பர் 8ம் தேதி முதல் தற்போது வரை 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா மற்றும் அதனைச் சார்ந்த இணை நோய்களால் இறந்துள்ளனர்.  ஆனால் இந்த இறப்புகள் அனைத்தும் மருத்துவமனையில் நிகழ்ந்தவை என்று கூறப்படுகிறது. மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த கணக்குகளும் இதுவரை  சேர்க்கப்படவில்லை என  சீன சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்,  மக்களின் கடும் போராட்டத்தால் கடந்த டிசம்பர் மாத துவக்கத்திலேயே  தளர்த்தப்பட்டது.  இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  மேலும் மயானங்களில் உடலை தகனம் செய்ய இடம் இல்லாத சூழலும் ஏற்பட்டுள்ளது.  இதனை அடுத்து சீன அரசு கொரோனா தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியது. சீனாவில் லட்சக்கணக்கானோர் இந்த கொரோனா  வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலின் படி,  உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற அமைப்புகள் தகவல்களை அளிக்கும் படி சீனாவிடம் கேட்டன.

இந்த  நிலையில் உச்சபட்சமாக டிசம்பர் 23ஆம் தேதி அன்று மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகளின் எண்ணிக்கையானது 30 லட்சமாக அதிகரித்தது. பின்னர்  ஜனவரி 13ஆம் தேதி நிலவரப்படி அந்த எண்ணிக்கை குறைந்து 4.77 லட்சமாக குறைந்திருக்கிறது. இத வித்தியாசம், உச்சகட்ட நிலையை நாடு கடந்து விட்டதை காட்டுவதாக கூறப்படுகிறது.  கூடுதல் தகவல் பகிர வேண்டிய அவசியம் இருப்பதாக   உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள்,  சீன அதிகாரிகளை சந்தித்து பேசியதாக அதன் பொது இயக்குனரான டேட்ரஸ் அதானம் தெரிவித்திருக்கிறார்.