×

கழிவறைகளை விட செல்போன்களில் அதிக பாக்டீரியாக்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

 

கழிவறைகளில் இருக்கும் பாக்டீரியாக்களை விட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் தான் அதிகளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிரிச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

செல்போன் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. சோறு இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் செல்போன் இல்லாம, வாழ முடியாது என்று கூறும் அளவிற்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் செல்போனின் தேவை அதிகரித்துள்ளது. நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவில்லாதது. 
 


இந்த நிலையில், கழிவறைகளில் இருக்கும் பாக்டீரியாக்களை விட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் தான் அதிகளவில் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிரிச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அரிசோனா பலகலைக்கழகம் இது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் கழிவறைகளில் இருக்கும் பாக்டீரியாக்களை விட 10 சதவீதம் அதிகமான பாக்டீரியாக்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பயன்படுத்தும் செல்போன்களில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.