×

97,43,110 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் – உலகளவு நிலவரம்!

கொரோனா நோய் தொற்று உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவைப் பார்த்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நோய்த் தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தது, இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி (25.07.2020 காலை) உலகில் கொரோனா மொத்தப் பாதிப்பு 1,59,45,385 (ஒரு கோடியே ஐம்பத்தி ஒன்பது லட்சத்து நாற்பத்தி ஐயாயிரத்து முந்நூற்று எண்பத்தில் ஐந்து).
 

கொரோனா நோய் தொற்று உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவைப் பார்த்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நோய்த் தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தது, இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி (25.07.2020 காலை) உலகில் கொரோனா மொத்தப் பாதிப்பு 1,59,45,385 (ஒரு கோடியே ஐம்பத்தி ஒன்பது லட்சத்து நாற்பத்தி ஐயாயிரத்து முந்நூற்று எண்பத்தில் ஐந்து). இவர்களின் சிகிச்சையினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,43,110 (தொன்னூற்று ஏழு லட்சத்து நாற்பத்தி மூவாயிரத்து நூற்றி பத்து). சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 6,42,808 (ஆறு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரத்து எண்ணூற்று எட்டு). இந்த எண்ணிக்கையில் குணம் அடைவோர்களின் சதவிகிதம் 94 ஆகவும் இறப்போரின் சதவிகிதம் 6 –ஆகவும் உள்ளது.

தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 55,59,467 (ஐம்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து நானூற்று அறுபத்தி ஏழு) இவர்களில் 54,93,204 பேர் அதாவது 99 சதவிகிதத்தின் குறைவான அளவு நோய் பாதிப்படைந்தவர்களாவும் 66,263 பேர் அதாவது ஒரு சதவிகிதம் மட்டும் தீவிர நோய்ப் பாதிப்புள்ளவர்களாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் தலைநகரான டெல்லியில்கூட நேற்று கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் 30 வயது இளைஞரின் உடலில் மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற பரிசோதனை நல்ல ரிசல்ட்டைச் சொல்லும் அளவுக்கு ஆரோக்கியமான முன்னெற்றங்களை அடைந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கோவாக்ஸின் மருந்தை மனிதர்களுக்குள் செலுத்தும் சோதனை நடைபெற்று அவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.