×

“சவுதி அரசின் பிஐஎஃப் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெயலில் ரூ. 9,555 கோடி முதலீடு”!

சவுதி அரேபிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பொது முதலீட்டு நிதி நிறுவனமான பிஐஎஃப், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 9,555 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இந்த தகவலை முறைப்படி அதிகாரப்பூர்வமாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி நிறுவனமான பிஐஎஃப், ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனத்தில் 2.04 சதவீத பங்குகளை வாங்க 9 ஆயிரத்து 555 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. ரிலையன்ஸ்
 

சவுதி அரேபிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பொது முதலீட்டு நிதி நிறுவனமான பிஐஎஃப், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் 9,555 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இந்த தகவலை முறைப்படி அதிகாரப்பூர்வமாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி நிறுவனமான பிஐஎஃப், ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனத்தில் 2.04 சதவீத பங்குகளை வாங்க 9 ஆயிரத்து 555 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் பிஐஎஃப் முதலீடு செய்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஜியோ பிளாட்பார்மில், 2.32 சதவீத பங்குகளை கைப்பற்ற பிஐஎஃப் நிறுவனம் முதலீடு செய்து இருந்தது.

இது குறித்து கருத்து கூறிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, சவுதி அரேபியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பிஐஎஃப் பெரும்பங்காற்றி வருகிறது. சவுதி அரேபிய அரசுடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நீண்ட கால உறவு இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் பிஐஎஃப் நிறுவனத்தின் முதலீடை தாம் மனதார வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் மட்டும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பல்வேறு வகைகளில் மொத்தம் 47 ஆயிரத்து 265 கோடி ரூபாயை நிதியாக திரட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முத்துக்குமார்