×

9.20 லட்சம் மரணம் – உலகளவில் கொரோனா நிலவரம்

கொரோனா பேரிடரில் உலகமே சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரேசில், கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. செப்டம்பர் 13-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2
 

கொரோனா பேரிடரில் உலகமே சிக்கித் தவிக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, பிரேசில், கொலம்பியா, பெரு உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

செப்டம்பர் 13-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 89 லட்சத்து 28 ஆயிரத்து 207 பேர்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 20 ஆயிரத்து 208 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில்
64,83,064 பேரும், இந்தியாவில் 47,54,356 பேரும், பிரேசில் நாட்டில் 43,15,687 பேரும் ரஷ்யாவில் 10,53,663 பேரும் பெரு நாட்டில் 7,16,670 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையால் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்காவை விடவும் அதிக பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும் என ஓர் ஆய்வு சொல்கிறது.