×

’75 சதவிகிதத்தின் ஆதரவு ஜோ பிடனுக்கு’ அமெரிக்கத் தேர்தல் நிலவரம்

உலகின் அனைத்து மீடியாக்களின் கண்களும் தற்போது அமெரிக்கா மீதுதான். அங்கு நடக்கும் ஒவ்வோர் அசைவையும் செய்திகளாக்கி வருகின்றன. நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. நோய்த் தொற்று அதிகளவில் இருக்கும் சூழலில் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து பல கேள்விகளும் குழப்பங்களும் இன்னமும் நீடிக்கின்றன. ஏனெனில், உலகளவில் அதிக கொரோனா பாதிப்புள்ள நாடு அமெரிக்காதான். குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிடுகிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க
 

உலகின் அனைத்து மீடியாக்களின் கண்களும் தற்போது அமெரிக்கா மீதுதான். அங்கு நடக்கும் ஒவ்வோர் அசைவையும் செய்திகளாக்கி வருகின்றன.

நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. நோய்த் தொற்று அதிகளவில் இருக்கும் சூழலில் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து பல கேள்விகளும் குழப்பங்களும் இன்னமும் நீடிக்கின்றன. ஏனெனில், உலகளவில் அதிக கொரோனா பாதிப்புள்ள நாடு அமெரிக்காதான்.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிடுகிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

ஜோபிடனை சீன ஆதரவாளராக முத்திரை குத்துவதும், கமலா ஹாரீஸின் குடியுரிமை குறித்த கேள்விகளை எழுப்புவதுமாக ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் சரவெடிகளைக் கொளுத்திப் போடுகிறார். இந்நிலையில் ஒரு சர்வே முடிவு ஜோ பிடனுக்கு ஆதரவாக வெளியாகியுள்ளது. 

உலகளவில் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிதித்துறை அதிகாரிடம் அமெரிக்க தேர்தல் தொடர்பான முக்கியான கருத்துக் கணிப்பை புகழ்பெற்ற ஊடகமான CNN நிறுவனம் நடத்தியது. பொதுவாக தேர்தல் நேரத்தில் இம்மாதிரியான கருத்து கணிப்பு நடப்பது சகஜம்தான் என்றாலும் இதன் முடிவு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது,

 கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட தலைமை நிதித்துறை அதிகாரிகளில் 75 சதவிகிதத்தினர் ஆதரவு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்குக் கிடைத்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றை அலட்சியமாகக் கையாண்டது, அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களால் ட்ரம்ப்க்கு ஆதரவு கிட்டாமல் போயிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.