×

5 கோடியைக் கடந்தது – உலகளவில் கொரோனா நிலவரம்

நவம்பர் 9-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 516 பேர்.கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 62 ஆயிரத்து 147 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 57 லட்சத்து 96 ஆயிரத்து
 

நவம்பர் 9-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 516 பேர்.கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 62 ஆயிரத்து 147 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 57 லட்சத்து 96 ஆயிரத்து 183 நபர்கள்.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,36,81,186 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 1,02,88,480 பேரும், இந்தியாவில் 85,53,864 பேரும், பிரேசில் நாட்டில் 56,64,115 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலை. நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ள புதிய நோயாளிகள் பட்டியலில், அமெரிக்காவில் 1,02,726 பேரும், பிரேசிலில் 10,554 பேரும், பிரான்சில் 38,619 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் 46,661 பேராக அதிகரித்துள்ளனர். அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.

நேற்று இறந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். அமெரிக்காவில் 512, பிரேசிலில் 111, பிரான்ஸில் 270 பேரும், இந்தியாவில் 491 பேரும் நேற்று இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை 1,26,653 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.