×

30 வீடியோ கேம்களை உருவாக்கிய 9 வயது சிறுவன்!

நைஜீரியாவில் 9 வயது சிறுவன், 30-க்கும் மேற்பட்ட வீடியோ கேம்களை உருவாக்கி ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். நைஜீரியாவில் 9 வயது சிறுவன், 30-க்கும் மேற்பட்ட வீடியோ கேம்களை உருவாக்கி ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். பரிணாம வளர்ச்சிகளின் மூலம் வளர்ந்து வந்த இந்த உலகம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் மோகம் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்தவகையில் நைஜீரியாவைச் சேர்ந்த பாசில் ஒக்பாரா (Basil Okpara) என்ற சிறுவனுக்கு 9
 

நைஜீரியாவில் 9 வயது சிறுவன், 30-க்கும் மேற்பட்ட வீடியோ கேம்களை உருவாக்கி ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நைஜீரியாவில் 9 வயது சிறுவன், 30-க்கும் மேற்பட்ட வீடியோ கேம்களை உருவாக்கி ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பரிணாம வளர்ச்சிகளின் மூலம் வளர்ந்து வந்த இந்த உலகம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் மோகம் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்தவகையில் நைஜீரியாவைச் சேர்ந்த பாசில் ஒக்பாரா (Basil Okpara) என்ற சிறுவனுக்கு 9 வயதாகிறது.

சிறுவயதிலிருந்தே வீடியோ கேம்களை விளையாடி வந்த இந்தச் சிறுவன் தற்போது 30 வீடியோ கேம்ஸ்களை உருவாக்கியுள்ளார். முக்கியமாக பாசில் உருவாக்கியுள்ள Frog Attack என்ற வீடியோ கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இந்த விளையாட்டுக்கு ஏராளமான இளைஞர்கள் அடிமை என்றே சொல்லலாம். வீடியோ கேம்களுக்கு தேவையான software களை கண்டுபிடித்து அதன்மூலம் 30க்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கியுள்ளார். 

பாசில் 4 வயதிலிருந்தே candy crush, temple run போன்ற வீடியோ கேம்களை தொடர்ந்து விளையாடி வந்ததாக அவரது தந்தை ஒக்பாரா தெரிவிக்கிறார். சிறுவயதிலிருந்தே கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் மீதிருந்த ஆர்வமே பாசிலின் இந்த சாதனைக்கு காரணம் எனக்கூறும் அவர், பாசில்  7 வயது இருக்கும்போதே Scratch 2 வெப்சைட் மூலம் வீடியோ கேமை உருவாக்கத் தொடங்கிவிட்டான் என பெருமையாக கூறுகிறார்.