×

ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி வானில் பறந்த 3 வயது சிறுமி – பதைபதைக்கும் சம்பவம்!

தைவான் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பட்டம் விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தைவான் நாட்டில் பட்டம் விடும் விழா கோலாகலமாக நடந்தது. அப்போது பட்டமிடும் திருவிழாவை தனது பெற்றோருடன் பார்க்க வந்த 3 வயது சிறுமி கூட்டத்தின் நடுவே நின்று அதை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிறுமி சிக்கி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு
 

தைவான் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பட்டம் விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தைவான் நாட்டில் பட்டம் விடும் விழா கோலாகலமாக நடந்தது. அப்போது பட்டமிடும் திருவிழாவை தனது பெற்றோருடன் பார்க்க வந்த 3 வயது சிறுமி கூட்டத்தின் நடுவே நின்று அதை ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிறுமி சிக்கி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்தார். சில நிமிடங்கள் நடந்த இந்த பதை பதைக்கும் சம்பவத்தின் ஆபத்தை உணர்ந்த சிலர் பட்டத்தை லாவகமாக கீழே இறக்கி சிறுமியை காப்பாற்றினர். சுழற்றி அடிக்கப்பட்ட பட்டத்தில் சிக்கி இருந்த சிறுமி சில காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.