×

2 வது மாடியில் பிறந்த நாள் கொண்டாட்டம்… 29 பேர் பலி – சீனாவில் துயரம்

ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் பலரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்ட சோகம் நடந்திருக்கிறது சீனாவில். சீனாவின் ஷான்க்சி நகரத்தில் உள்ள இரண்டு மாடி ஹோட்டலில் 80 வயதுள்ள ஒருவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது திடீரென்று ஹோட்டல் இடிந்து விழுந்தது. விழாவில் கலந்துகொண்டவர்கள் அலறி விழுந்தனர். இரண்டு மாடி கட்டடம் விழுகிறது என்றால் அதன் பாதிப்பும் அதிகமாகத்தானே இருக்கும். இதுவரை 29 பேர் இந்த கட்டிட இடிபாட்டில் இறந்துள்ளனர்.
 

ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் பலரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்ட சோகம் நடந்திருக்கிறது சீனாவில்.

சீனாவின் ஷான்க்சி நகரத்தில் உள்ள இரண்டு மாடி ஹோட்டலில் 80 வயதுள்ள ஒருவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது திடீரென்று ஹோட்டல் இடிந்து விழுந்தது. விழாவில் கலந்துகொண்டவர்கள் அலறி விழுந்தனர். இரண்டு மாடி கட்டடம் விழுகிறது என்றால் அதன் பாதிப்பும் அதிகமாகத்தானே இருக்கும்.

இதுவரை 29 பேர் இந்த கட்டிட இடிபாட்டில் இறந்துள்ளனர். மேலும் 28 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டவர்கள் மற்றும் ஹோட்டலின் பணியாளர்கள் என இதுவரை 57 பேர் உயிரோடு மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களும் மோப்ப நாய்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த ஹோட்டல் பழமையானது என்றுக்கூறப்பட்டாலும், இரண்டு மாடிக்கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்ததற்காக காரணம் இதுவரை கண்டறியப்பட வில்லை.

கொரோனா நோய்த் தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டது சீனாதான். பலரும் கொத்து கொத்தாக நோய்த் தொற்றால் சிக்கினர். கடும் போராட்டத்திற்குப் பிறகு மீண்டெழுந்து வந்திருக்கிறது சீனா. தற்போதுதான் சீனா தலைநகரில் முகக் கவசம் அவசியம் இல்லை என்ற அறிவிப்புக் கொடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

இந்நிலையில் ஒரே இடத்தில் 29 பேர் பலியான சம்பவம் அந்நாட்டையே உலுக்கி விட்டது. சம்ப இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.