×

27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்ற ரஷ்ய தாய் – உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் என தகவல்

உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண்ணாக ரஷ்யாவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண்ணாக ரஷ்யாவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் யார் என்ற சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த வாசில்யேவ் என்பவரின் முதல் மனைவிக்கு 69 குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது 1725 மற்றும் 1765-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில்
 

உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண்ணாக ரஷ்யாவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண்ணாக ரஷ்யாவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

உலகில் அதிக குழந்தைகளை பெற்ற பெண் யார் என்ற சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த வாசில்யேவ் என்பவரின் முதல் மனைவிக்கு 69 குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது 1725 மற்றும் 1765-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் இந்த பிரசவம் நடந்துள்ளது. அந்த பெண்ணிற்கு அவருடைய வாழ்நாளில் மொத்தம் 27 முறை பிரசவங்கள் நடந்துள்ளது.

இதில் மொத்தம் 69 குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ளார். எவ்வாறு எனில் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் என்று 16 முறையும், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் என்று 7 முறையும், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் என்று 4 முறையும் வாசில்யேவின் முதல் மனைவி குழந்தைகளை அனாசயமாக பெற்றுள்ளார்.

இதில் ஒரு இரட்டை குழந்தைகளை உயிரிழந்த நிலையில் மீதமிருந்த 67 குழந்தைகள் நலமுடன் வாழ்ந்துள்ளனர். இதில் இன்னும் ஆச்சர்யமான விஷயம் என்னெவெனில் வாசில்யேவ் இரண்டாவது மனைவி 18 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அப்படி பார்க்கையில் வாசில்யேவ்க்கு மொத்தம் 87 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் மொத்தம் 82 பேர் நலமுடன் வாழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இன்றைய நவீன காலகட்டத்தில் ஒரேயொரு குழந்தையை பெற்றுக் கொண்டு அவர்களை வளர்ப்பதே போதும், போதுமென்று ஆகி விட்ட நிலையில் வாசில்யேவ் குடும்பத்தின் வாரிசுகளை எண்ணிப் பார்க்கையில் ஆச்சர்யம் தலைக்கேறுவதில் வியப்பில்லை தானே?