×

என் மனைவி வேறு ஒருவரின் மனைவியுடன்.. இந்த உறவு துரோகத்தில் சேராதா?

தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது.. தன் மனைவிக்கு வேறு ஒரு ஆணின் தொடர்பு இருக்கிறது என்றுதான் வழக்கு இருக்கும். ஆனால், தன் மனைவி வேறோரு மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து என்னை மன உளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் 39வயதான ஆண். இந்த விசித்திரமான வழக்கு விபரம் என்னவென்றால், ஜப்பானை சேர்ந்த அந்த நபர் தனது மனைவிக்கு 37 வயது என்றும், அவர் ஆன்லைன் மூலமாக
 

தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது.. தன் மனைவிக்கு வேறு ஒரு ஆணின் தொடர்பு இருக்கிறது என்றுதான் வழக்கு இருக்கும். ஆனால், தன் மனைவி வேறோரு மனைவியுடன் தொடர்பு வைத்திருக்கிறார். இதற்கு சரியான நடவடிக்கை எடுத்து என்னை மன உளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் 39வயதான ஆண்.

இந்த விசித்திரமான வழக்கு விபரம் என்னவென்றால், ஜப்பானை சேர்ந்த அந்த நபர் தனது மனைவிக்கு 37 வயது என்றும், அவர் ஆன்லைன் மூலமாக வேறு ஒருவரின் மனைவியுடன் நட்பில் இருந்தார். நாளடைவில் அவர்கள் இருவரும் காதலர்கள் ஆகிவிட்டனர். இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கிறார்கள். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. என் மனைவி எனக்கு இப்படி துரோகம் செய்வார் என்று நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. இதனால் எங்களது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே தாங்கள் இதற்கு நல்ல தீர்ப்பினை சொல்ல வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையின்போது, ’’அவரின் மனைவியுடன் நான் உறவு வைத்துக்கொள்வதால் அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்க வாய்ப்பில்லை. அது துரோகத்திலும் பொருந்தாது’’ என்று வாதிட்டார் குற்றம்சாட்டப்பட்ட பெண்.

இந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரு பெண்களுக்கு இடையே உள்ள உறவு துரோகத்தில் சேராது என்று தீர்ப்பளித்தார். மேலும், அந்த பெண் வழக்கு தொடர்ந்தவருக்கு 70 ஆயிரம் ரூபாய்(இந்திய மதிப்பில்) அபராதம் கட்ட வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்துமுடிந்துள்ள இந்த விசித்திரமான வழக்கின் விபரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.